இங்கிலாந்து நாடாளுமன்ற வளாக தடுப்பு வேலியின் மீது மோதிய கார்
இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டன் நகரில், இங்கிலாந்து பாராளுமன்ற வாசல் அருகேயுள்ள சாலையில் உள்ள சிக்னலில் சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, அந்த சாலையில் தவறான பாதையில் வேகமாக வந்த கார் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் பலர் காயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி பாராளுமன்ற வாசலில் இருந்த தடுப்பு வேலியின் மீது மோதி நின்றது. காரை ஓட்டிவந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story