பனி படர்ந்த மலைகள், பாலங்கள், நதிகளை கடந்து செல்லும் ரயில்

சுவிட்சர்லாந்தில் உள்ள Rhaetian Railway நிறுவனம் இயக்கும், பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ரயில் பாதையாகும்
பனி படர்ந்த மலைகள், பாலங்கள், நதிகளை கடந்து செல்லும் ரயில்
x
சுவிட்சர்லாந்தில் 5 ஆயிரத்து 63 கி.மீ. கொண்ட ரயில்வே பாதையில், வருடந்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு சுவிஸ் குடிமகனும் சராசரியாக ரயில் மூலம் 2 ஆயிரத்து 103 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் உள்ள 366 கி.மீ குறுகிய ரயில்பாதைகளில், ராடியன் ரயில்வே மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. உலக பாரம்பரிய பாதைகளும் இவற்றில் அடங்குகின்றன. ஆல்பஸ் மலை வழியாக உருவாக்கப்பட்ட புதிய ரயில்வே சுரங்கங்கள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் வழியாகும்.இங்குள்ள தனியார் ரயில்வே நிறுவனங்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் 

சுவிஸ் போக்குவரத்து இதுவாகும். கடந்த 1888ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, 1896 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது இந்த ரயில்வே நிறுவனம்.Graubünden, Switzerland, Lombardy, Italy ஆகிய இடங்களை இந்த ரயில் வழித் தடம் இணைக்கிறது. பனி படர்ந்த இடங்கள், மலைகள், நதிகள், கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 253 மீட்டர் உயரமுள்ள பகுதிகளை இந்த ரயில் கடந்து செல்கிறது.இது, UNESCO உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில்,சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த ரயில் வழித்தடம் இதுவாகும்..

Next Story

மேலும் செய்திகள்