விண்வெளிக்கு பயணிகள் சுற்றுலா : விண்கலம் தயாரிப்பில் அமேசான் தீவிரம்
அமேசான் நிறுவனர் Jeff Bezos க்கு சொந்தமான ப்ளு ஆரிஜின் என்ற நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும் விண்கல தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த விண்கலம் வேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.பலகட்ட சோதனைகள் வெற்றிகமாக நடத்தப்பட்டு வருகிறது.இருந்தாலும் இன்னும் இரண்டுமுறை சோதிக்க வேண்டியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
அநேகமாக 2020 க்கு பின் பயணிகளுடன் தமது முதல் பயணத்தை துவக்கும் என கூறப்படுகிறது.ஒவ்வொருவருககும் எவ்வளவு கட்டணம் என்பதையும் அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறுகிறார்கள்.விண்கலம் சரியாக இயங்க, கிட்டத்தட்ட 100 பொறியாளர்களும், ஆயிரக்கணக்கான பணியாட்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
மேலும் 3 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, விரைந்து பணியை முடித்து, உலகிலேயே முதன்முறையாக விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நிறுவனம் என்ற பெருமையை பெற Jeff Bezos திட்டமிட்டிருக்கிறார்.
Next Story