மீசை, தாடிக்காக உலக போட்டி..!
மீசை தாடிக்காக உலக போட்டிகள் நடந்து வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா...? ஆம்... அந்த வினோத போட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பெரும்பாலும், அரண்மனைகளிலும், புகழ்பெற்ற அருங்காட்சியகங்களிலும் தான் இதற்கான உலக போட்டிகள் நடத்தப்படுகின்றன. அங்குவரும் பார்வையாளர்கள், கலைநயத்தையும், அரிய பொருட்களையும் கண்டு வியப்பது மட்டமல்லாமல் போட்டியாளர்களின் மீசை தாடிகளை கண்டும் வாயடைத்து போய் நிற்கின்றனர். வீரர்களுடன் புகைப்படம் எடுக்கவும் பார்வையாளர்கள் முண்டியடிக்கின்றனர். பரிசுபொருட்களை கடந்து பார்வையாளர்களை கவர்வதிலே போட்டியாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த போட்டிக்காக உலக அளவில் World beard mustache association என்ற சங்கம் உருவாக்கப்பட்டது.போட்டியாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துகொண்டு போட்டியில் பங்கேற்கலாம்.மீசை, தாடி, மீசையுடன் கூடிய தாடி என மூன்று முக்கிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் இருந்து அதிக நீளம், அதிக அடர்த்தி, வசீகரமானது, நல்ல வடிவமைப்பு என கிட்டத்தட்ட 27 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படுகின்றன.போட்டியாளர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். மீசை, தாடி பராமரிப்பிற்காகவே பல லட்சங்கள் செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகள் பெரும்பாலான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் பங்கேற்ற வீரர்களின் ஸ்டைலில் தாடி மீசை வளர்க்க இளைஞர்கள் ஆர்வம் கொண்டனர். இதனாலே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள world beard and mustache chambionship போட்டிகளை இளைஞர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Next Story