ரஷ்யாவை ஆட்டி படைக்கும் கால்பந்து காய்ச்சல் : கழுகுக்கு ரஷ்ய கோல் கீப்பரின் பெயர்
நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிரான பெனால்டி சூட் அவுட்டில் அவரது சிறப்பான செயல்பாட்டால் அந்த அணி வென்றது.
உலகக் கோப்பை காய்ச்சல் ரஷ்யாவை ஆட்டிப்படைக்கும் நிலையில், அங்குள்ள சரணாலயத்தில் உள்ள கழுகு ஒன்றுக்கு ரஷ்ய கோல் கீப்பர் அக்கின்ஃபீ (AKINFEEV) யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிரான பெனால்டி சூட் அவுட்டில் அவரது சிறப்பான செயல்பாட்டால் அந்த அணி வென்றது. இதனால், அவரை பாராட்டும் விதமாக, கழுகு போல் அவர் செயல்பட்டார் என்பதை கூறும் விதத்தில், மாஸ்கோ சரணாலயத்தில் உள்ள கழுகுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்கின்ஃபீ பெயர் சூட்டப்பட்ட கழுகை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.
Next Story