ஆஸ்திரேலியா : வேகமாக அழிந்து வரும் கோலா கரடிகளை காக்க தீவிர நடவடிக்கை

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்று கோலா கரடிகள்..வேகமாக அ​ழிந்து வரும் இந்த அழகிய விலங்குகளை காக்க விஞ்ஞானிகளும், வன உயிரின ஆர்வலர்களும் கடுமையாக போராடி வருகிறார்கள்..
ஆஸ்திரேலியா : வேகமாக அழிந்து வரும் கோலா கரடிகளை காக்க தீவிர நடவடிக்கை
x
தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் பரவலாக இவ்விலங்குகள் உள்ளன. குறிப்பாக கடலோர பகுதிகளில் வசிக்கின்றன.. இவை தைல இலை என அழைக்கப்படும ஈகாலிப்டஸ் இலைகளை உண்கின்றன.. 

தைல இலையில் போதுமான சத்துக்கள் இல்லாததால் , கோலா கரடிகள் எப்போதும் சோம்பேறிகளாக உள்ளன.. ஒரு நாளைக்கு 20 மணிநேரத்தை தூங்கியே கழிக்கின்றன.. 

இவை குழுவாக இருப்பதில்லை.. பெரும்பாலும் எப்போதும் தனித்தே இருக்கின்றன.. 

கங்காருக்களை போலவே இந்த கோலா கரடிகளும், குட்டிகளை வயிற்றின் மீதுள்ள பையில் தாங்கி வளர்க்கிறது. கிட்டத்த்ட்ட 7 மாதங்கள் குட்டியை இவ்வாறு பாதுகாக்கிறது.

இந்த தனித்துவமான நடவடிக்கைகளால் கங்காருவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது..

 20 ம் நூற்றாண்டில் இந்த உயிரினம் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதால்  அரிதாகிப்போன விலங்காக மாறியிருக்கிறது. 

அதோடு  காடுகள் இயற்கை சூழல்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதும் கோலாக்களின் அழிவிற்கு வழிவகுக்கிறது..

அதோடு தைல இலையை உண்பதால் உடலுக்கு விஷத்தன்மை சேர்ந்து தீங்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்..  இது கூட கோலா கரடிகளின் எண்ணிக்கை குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம என கருதப்படுகிறது.. 

ஐயூசிஎன் எனப்படும் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பு 
வேகமாக அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் கோலா கரடியை சேர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்