"உடலில் சேறு பூசினால், நோய் தீர்கிறது" - ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பங்கேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா அருகே, "சேறு திருவிழா" உற்சாகமாக கொண்டாடப்பட்டது
உடலில் சேறு பூசினால், நோய் தீர்கிறது - ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பங்கேற்பு
x
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு அருகே, சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது Aliaga நகரம்... இங்கு, கத்தோலிக்க திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும், ''சேறு பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி'' களை கட்டியது. இது, ரத்தத்தை குளிர்விப்பதற்காக நடைபெறும் நிகழ்வு என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், வறுமையின் நிலையை அனைவரும் உணர்ந்து, ஒரு துறவி போன்ற வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ள, விழா நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது..ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர், வருடாந்திர சேறு திருவிழாவிற்காக, விடிந்தும் விடியாத அதிகாலையிலேயே கூடி விடுகின்றனர். உலர்ந்த வாழை இலைகளை தங்களது உடலில், சுற்றிக் கொள்கின்றனர். பின்னர், சேற்றில் இறங்கி, தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக் கொள்கின்றனர். 

இரண்டாம் உலகப் போரின் போது, தங்களது நாடு மீண்டெழுந்த அந்த நாளை நினைவு கூறும் வகையில், இந்த விழா நடைபெறுகிறது. இது, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழா என்றும், தங்களது தவறுகளுக்கு மன்னிப்பு கோரும் நிகழ்வு என்றும், உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கத்தோலிக்க குருவாக மதிக்கப்படும், Saint John-னின் பிறந்த நாள் விழாவாகவும், இந்நிகழ்வு கருதப்படுகிறது.கடந்த 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழா முக்கியத்துவம் பெற்றது. இந்த விழாவின் மூலம், தங்களது நோய்க்கு நிவாரணம் கிடைப்பதாகவும், வேண்டுதல் நிறைவடைவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இந்த விழாவில், ஏழை - பணக்காரர் என்ற பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு, சேறு பூசும் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்