ரூ 66000 சம்பாதிக்க எவ்வளவு நாள் வேலை செய்ய வேண்டும்..?
எவ்வளவு நாள் வேலை செய்தால் 1000 டாலர் கிடைக்கும்?
ஒவ்வொரு நாட்டின் தலைநகரம், அல்லது ஒரு நாட்டின், பொருளாதார மையமாக இருக்கும் இடங்களில், ஒரு மனிதன் 1000 டாலர் சம்பாதிக்க, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 66 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு நாள் ஆகும் தெரியுமா?
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் ஆயிரம் டாலர் என்பது, 5 நாள் சம்பளம்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1000 டாலர் என்பது 7 நாள் சம்பளம்..
ஹாங்காங்கில் 1000 டாலர் சம்பளம் என்பது 9 நாள் வேலைக்கான ஊதியம்...
ஆயிரம் டாலர் சம்பாதிக்க, லண்டனில் 11 நாளும், ஸ்ரேலின் டெல் அவிவ், துபாய் போன்ற நாடுகளில் 13 நாளும் வேலை செய்ய வேண்டும்..
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் 36 நாட்களும், ரஷ்யாவின் மாஸ்கோவில் 37 நாளும், சீனாவின் பீஜிங்கில், 39 நாட்களும் வேலை செய்தால் 1000 டாலர் சம்பாதிக்க முடியும்...
1000 டாலர் சம்பளம் பெற, கென்யாவின் தலைநகரான, நைரோபியில் 72 நாட்களும் வேலை செய்ய வேண்டும்...
இந்தியாவை பொறுத்தவரை, 1000 டாலர் அதாவது 66 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற சராசரியாக, டெல்லியில் 100 நாட்களும், மும்பையில் 114 நாட்களும் வேலை செய்ய வேண்டும்.
Next Story