அமெரிக்காவில் வரவேற்பை பெற்று வரும் "தோட்டக் கல்வி"
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் "காய்கறி தோட்டங்கள்" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது .
நவீன உலகில் அதிகரித்து வரும் உடல் பருமனால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே.. இதிலும் அமெரிக்காவில் 2 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களில் 18 சதவீதத்திற்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வு.
உடல் பருமனை தவிர்க்கும் விதமாக பள்ளிகூட வளாகங்களில் "காய்கறி தோட்டங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது, "பிக் கீரின்" என்ற தொண்டு நிறுவனம். "ஸ்பேஸ் எக்ஸ்" என்ற உலக பிரபல விண்வெளி ஆய்வு நிலையத்தின் நிறுவனர் மற்றும் உலக கோடீஸ்வர்களுள் ஒருவரான இலான் மஸ்க்கின் என்பவரது இளைய சகோதரரான கிம்பால் மஸ்க் இந்த திட்டத்தினை வடிவமைத்து செயல்வடுத்தி வருகிறார்.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பள்ளிகளை தேர்ந்தேடுத்து, காய்கறி தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் இவர், ஆறு வருடங்களில் அமெரிக்காவின் முக்கிய ஆறு நகரங்களில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிகூட தோட்டங்கள் அமைத்துள்ளார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இயற்கை உணவு முறைகளை பழக்குவதோடு, அதன் முக்கியத்துவத்தை புரியவைக்க முயற்சிப்பதே சமூகத்தில் இருக்கு அனைவரது கடமை என தெரிவிக்கிறார் "பிக் கீரின்" நிறுவனர், கிம்பால் மஸ்க்.
வகுப்பறையில் பாடமாக ஆரோக்கியம் குறித்து குழந்தைகளுக்கு புரியவைப்பதை காட்டிலும், அவர்கள் அதனை அனுபவ பூர்வமாக உணர்வதற்கான முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளன, இந்த காய்கறி தோட்டங்கள். மாணவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள இந்த காய்கறி தோட்டங்கள், இயற்கையான சூழலை மனிதன் எவ்வாறு அனுக வேண்டும் உள்ளிட்ட வாழ்க்கை பாடங்களையும் எளிமையான முறையில் கற்று கொடுக்கின்றனர்.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் விரும்பினால் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்று சிறு தொழிலுக்கான முதல் படிகட்டினை தொடங்கலாம்.இதன் மூலம் ஒரு பள்ளிகூடத்தை சேர்ந்த மாணவர்கள் ஆண்டுற்கு சராசரியாக 400 டாலர் சம்பாதிக்கின்றனர். ஐரோப்பிய உணவு வகைகளை அதன் விபரிதம் தெரியாமல் நம் நாட்டு குழந்தைகள் விரும்பி உண்கின்றனர்.
ஆனால், இந்த உணவு வகைகளை சந்தை படுத்திய நாடுகளோ நம் கலாச்சார உணவுகளான இயற்கை உணவுக்கு மாறி வருகின்றன.
இதை நம் நாட்டு மக்கள் எப்போது புரிந்து கொள்ளபோகின்றனர் என்பதே நமது எதிர்பார்ப்பு....
Next Story