ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா. அறிக்கை - இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. அதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. அதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் 49 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில் கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி வருவதாகவும், அதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடைபெறும் சர்வதேச எல்லைக்கோடு விதிமுறை மீறல் குறித்து ஆய்வு நடத்த நிபந்தனையற்ற அனுமதி வழங்க பாகிஸ்தான் மற்றும் இந்தியா 2 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருவதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 145 பொது மக்கள் உயிரிழந்து உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பகுதியில் இருந்து தகவல்கள் பெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும், அங்கு வேறுவிதமான மனித உரிமை மீறல்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
முழுமையான தகவல் இல்லாமல், திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இந்தியாவுக்கு எதிராக இந்த அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story