வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் சந்திப்பு

சிங்கப்பூரின் இஸ்தானா நகரில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு பிரதமர் லீ ஹசெய்ன் லூங்கை சந்தித்து பேசினார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் சந்திப்பு
x
சிங்கப்பூரின் சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசுகின்றனர். இரு தலைவர்களும் சந்தித்து பேசும் நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் இரண்டரை மணியளவில், சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் சென்றடைந்ததார். அவரை, இந்திய வம்சாவளி தமிழரான சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர், 30 வாகனங்கள் அணிவகுப்புடன் கிம் ஜாங் உன் செயின்ட் ரெஜிஸ் எனும் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசெய்ன் லூங்கை சந்தித்து பேசினார். இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்