தியானென்மென் தாக்குதல் நினைவு தினம் - பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தியானென்மென் தாக்குதல் நினைவு தினம் - பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தியானென்மென் சதுக்க தாக்குதலில் பலியானோர்க்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக ஹாங்காங்கின் டவுன்டவுன் பார்க் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 1987 ஆம் ஆண்டுகளில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஹூ யாவோ என்பவர் திடீரென பதவி விலக்கப்பட்டு, மர்மமான முறையில் இறந்ததால் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இறுதியாக பெய்ஜிங் என்ற இடத்தில் போராட்டக்குழு ஒன்றிணைந்த போது அரசு ஒடுக்குமுறையை கையாண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கொன்று குவித்தது. ஆனால் இதுவரை உண்மையான பலி எண்ணிக்கையை சொல்ல மறுத்து வருகிறது சீனா. இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Next Story