கோஹினூர் வைரத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?

கோஹினூர் வைரம்... என்ன அது...? அதன் வரலாற்றுப் பின்னணி தான் என்ன...?
கோஹினூர் வைரத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
x
கோஹினூர் வைரத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று, பிரதமர் அலுவலகத்திடம், மத்திய தகவல் ஆணையம் தகவல் கேட்டுள்ளது. அதாவது, கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்திய புராதன சின்னங்களை மீட்டு, இந்தியா கொண்டு வருவதற்காக, அரசு மேற்கொண்ட முயற்சிகளை கூறும்படி, பிரதமர் அலுவலகத்திடம் மத்திய தகவல் ஆணையர், கேட்டுக் கொண்டுள்ளார். 

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடமாகும். 

இந்த வைரமானது, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்றும் கூறப்படுகிறது.

கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள், அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் சாபக் கேடாகும். அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர்.

இந்த கோஹினூர் வைரத்தின் சாபம் எனப்படும் மர்மம் ஆண்களை மட்டுமே பின் தொடர்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடைசியில், இந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள், பெண்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தான், இப்பது விக்டோரியா, எலிசபெத் போன்ற ராணிகளின் கைமாறி வருகிறது கோஹினூர் வைரம்

கடந்த 1877ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட போது, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரசின் ஆபரணங்களின் ஒரு பகுதியாக மாறியது. ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால், இது கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் பயணம் தொடங்கியுள்ளது. இந்த வைரம், குவாலியர் மன்னர், மாமன்னர் பாபர் மற்றும் பாபரின் மகனான ஹீமாயூனிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
டெல்லி சுல்தான் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து, கை மாறி,கை மாறி, இறுதியாக 1526 ஆம் ஆண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபர் கைகளுக்கு வந்தது கோஹினூர் வைரம் என்று வரலாற்றுச் சான்றுகளில் கூறப்படுகிறது..
 



Next Story

மேலும் செய்திகள்