உலகின் மிகச்சிறிய தங்கும் அறை
உலகின் மிகச் சிறிய தங்கும் அறை என ஆராய்ச்சி முயற்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆனால், இது போல பயன்பாட்டுக்கு வந்ததில்லை. இப்போதைக்கு பயன்பாட்டில் உள்ள மிகச்சிறிய தங்கும் அறை இதுதான்.
உலகின் மிகச் சிறிய தங்கும் அறை என ஆராய்ச்சி முயற்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆனால், இது போல பயன்பாட்டுக்கு வந்ததில்லை. இப்போதைக்கு பயன்பாட்டில் உள்ள மிகச்சிறிய தங்கும் அறை இதுதான்.
ரஷ்யாவின் Yekaterinburg நகரில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் இந்த கேப்ஸ்யூல் வகை தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. வரும் 14 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்க வைக்க அங்குள்ள ஹோட்டல்களில் அறைகள் இல்லை. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த கேப்ஸ்யூல் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பார்க்க குட்டியாக இருந்தாலும் இந்த அறைகளுக்குள் ஏர் கண்டிஷன், தொலைக்காட்சி என எல்லா வசதிகளும் உண்டு. அறைகளின் அளவைப் போலவே இதற்கான வாடகையும் குறைவுதான். ஒரு நாள் தங்கும் வாடகை அதிகபட்சமாக ஆயிரத்து முன்னூறு ரூபாய். கால்பந்து உலகக் கோப்பை நடக்கும் நகரங்களில் இவ்வளவு கம்மியாக அறை வாடகை இருந்ததே இல்லை என்கிறார்கள் கால்பந்து ரசிகர்கள்.
Next Story