ஈரானில் கொளுத்தி எடுக்கும் 123 டிகிரிவெயில்-வெளியே எட்டி கூட பார்க்க முடியா நிலை..விடுமுறை அறிவிப்பு

x

மேற்காசிய நாடான ஈரானில் பொது விடுமுறை அளிக்கப்படும் அளவிற்கு வெப்பம் வெளுத்து வாங்கி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் அதிகளவு

வெப்ப நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில், ஈரான்

கடும் வெப்பத்தால் எரிந்து கொண்டு இருக்கிறது.

பாலைவனப்பிரதேசம் என்று கருதப்படும் நாடுகளில் ஒன்றான ஈரானில், வெப்பத்திற்கு குறையே இருக்காது.

இங்கு குளிர்காலம் குறுகிய காலங்களே நீடிக்கும் ஆனால் கோடைக்காலமோ மிக நீண்டது.

இவ்வளவு ஏன், உலகின் அதீத வெப்பமயமான லூட் பாலை வனம் ஈரானில் தான் உள்ளது. இதன் மூலம் சராசரியாகவே ஈரான் எவ்வளவு சூடானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாகவே வெயில் தாக்கம் அதிகம் கொண்ட ஈரானில் தற்போது, வரலாறு காணாத வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஈரானின் தெற்கு நகரான அஹ்வாசில் 123 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டிற்குள்ளேயே மக்கள்

முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு

அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளதால்...

காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக குழந்தைகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் வெயில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை அறவே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க...இது தங்களுக்கு பழகிய வெப்பநிலையே என்றும் முன்பை விட தற்போது வெப்பம் குறைந்துள்ளதாகவும் மக்கள் புது விளக்கம் அளித்துள்ளனர்.

வெயிலின் தாக்கத்திற்காக பொது விடுமுறை அறிவிக்கப் படவில்லை என்றும்...மின்சார தட்டுப்பாடே பொது விடுமுறைக்கு காரணம் என ஒரு தரப்பு மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஈரானில் கடுமையான நீர் பற்றாக்குறை நீடிப்பதால், நீரில் இருந்து தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள தாகவும்..இதனால் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கையாள முடியாமல் ஈரான் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

இருப்பினும் இவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான் அரசு..வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிக்கப் பட்டுள்ளதால் பொது விடுமுறையை நீட்டிக்க பரிசீலித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்