சென்னையில் தவிர்க்கப்பட்ட உயிர் பலிகள்.. அரங்கேறிய மெகா சாதனை

x

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்த ஆண்டு விபத்துகள் குறைந்திருப்பதாக பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் விபத்தை பூஜ்ஜியமாக மாற்றவும், பாதுகாப்பான நகரமாக மாற்றவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில்"zero is good" என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி வரை நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் Instagram ரீல்ஸ் போட்டி நடத்தப்பட்டது.

அவற்றில் சிறந்த ரீல்ஸ் வீடியோவை உருவாக்கிய பிரவீண் குமார், சதீஷ், சத்ய ஸ்ரீ ஆகியோருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரக் காலத்தில், சென்னை சாலைகளில் 6 நாட்கள் உயிரிழப்பு ஏற்படாததால் அவை ஜீரோ உயிரிழப்பு நாளாக கருதப்பட்டன.

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 146 விபத்துக்கள் பதிவாகிய நிலையில், இந்த ஆண்டுகள் மொத்தம் 56 விபத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்