"போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் தாங்க முடியவில்லை.." - மைதானம் கேட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

x

சென்னை மாதவரத்தில், தனது பகுதியில் உள்ள இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உடையார்தோட்டத்தை சேர்ந்த குகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அவர் பதக்கங்களை பெற்றதாக கூறப்படுகிறது. தனது பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் திறமை இருந்தும், மைதானம் இல்லாமல் அவதியடைந்ததாகவும், அவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. நண்பர்களுடன் பலமுறை விளையாட்டு மைதானம் அமைக்க முயற்சித்தும் முடியாததால், கடந்த 3 நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மைதானம் அமைக்கக்கோரி உருக்கமாக கடிதம் எழுதிய குகன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்