"என்னை போய் அப்படி நினைச்சிட்டீங்களே டீச்சர்" - மனமுடைந்து மாணவன் எழுதிய கடிதம் | school Student
"என்னை போய் அப்படி நினைச்சிட்டீங்களே டீச்சர்" - மனமுடைந்து மாணவன் எழுதிய கடிதம்
பின் எடுத்த விபரீத முடிவு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் ஆசிரியை திட்டியதால் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாடனை அருகே கல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜய். 15 வயது சிறுவனான இவர், சின்னக்கீரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புபடித்து வந்த நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், தற்கொலைக்கு முன்பு மாணவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்த நிலையில், தனக்கு பாடம் எடுத்த ஆசிரியையை ஒருவரே தனது தற்கொலைக்கு காரணம் எனவும், ஆசிரியர் தன்னை திட்டிய மன உளைச்சலிலே தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக் கோரி மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை மேலும் கூட்டியது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அனைவரும் கலைந்து சென்ற நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது