இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்

x

ஏற்காடு அருகே இடிந்து விழும்நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காக்கம்பாடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால், மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகும் அவலம் உள்ளது. மேலும் பள்ளியின் மேல் உயர் அழுத்த மின் கம்பி செல்வதால் அச்சத்துடனே பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது தவிர பள்ளி கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது.இடிந்து விழும் தருவாயில் இருக்கும் பள்ளியை சீரமைக்க கோரி பலமுறை கல்வி துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்