குடிநீரில் புழு.. மாணவிகள் அதிர்ச்சி - தலைமை ஆசிரியர் கொடுத்த விபரீத பரிசு - சேலத்தில் பயங்கரம்
சேலம் மாநகர் கோட்டைப் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியை முறையாக சுத்தப்படுத்தாததால் புழுக்கள், குப்பைகள் கிடந்துள்ளன. ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாததால் மாசடைந்த குடிநீரை மாணவிகள் குடித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் உணவு இடைவேளையின்போது தண்ணீர் பருகச் சென்ற இரண்டு மாணவிகள் குடிநீரில் புழுக்கள் இருந்ததை பார்த்து தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் புகார் தெரிவித்த இரண்டு மாணவிகளையும் முட்டிபோட வைத்து தண்டனை கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் டிசி கொடுத்து விடுவோம் என தலைமையாசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
Next Story