வெளிநாட்டில் வேலை.. ஒர்க் ஆர்டரோடு சேர்ந்து வந்த அதிர்ச்சி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம், 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தரப்படும் என்ற போஸ்டரை பார்த்து, சிவகங்கை மாவட்டத்தை ரகுபதி ராஜன் என்பவரை தொடர்புகொண்டுள்ளார். அப்போது ரகுபதி ராஜன், நியூசிலாந்தில் வேலை வாங்கி தர 4 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதனை நம்பி முத்துராமலிங்கமும் 4 லட்சத்தை அளித்துள்ளார். ஆனால் ரகுபதி ராஜனோ, முத்துராமலிங்கத்தின் பாஸ்போர்ட்டில் ஒர்க் பெர்மிட் ஸ்டாம்பிங் மற்றும் ஒர்க் ஆர்டர் ஆகியவற்றை, போலியாக அடித்து கொடுத்துள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரகுபதி ராஜனை கைது செய்தனர். விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கப் தருவதாக கூறி பலரிடம், ரகுபதி ராஜன் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.