1 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை - வீடியோவில் பறந்து வரும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்
நாடு முழுவதும் 47 இடங்களில் ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பதவிகளுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேரவுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி, பணி நியமன கடிதங்களை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, டெல்லியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" முதலாவது கட்டடத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
Next Story