சார்ஜ் ஏற்ற வந்த நபருடன் நெருக்கம்.. வாட்ஸ்அப்பில் லீக்கான வீடியோ.. பெண் எடுத்த முடிவால் அதிர்ச்சி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடை சேர்ந்தவர் பிரகாஷ். 20 வயதான இவர், கட்டட தொழிலாளியான நிலையில், திருமணமான பெண் ஒருவரின் வீட்டிற்கு செல்போன் சார்ஜ் ஏற்றுவதாக கூறி அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது, அப்பெண்ணுடன் இளைஞருக்கு தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. இதில், இருவரும் நெருக்கமாக இருந்ததை பெண்ணுக்கு தெரியாமல் பிரகாஷ் வீடியோ எடுத்திருக்கிறார். இதனையறிந்த, பிரகாஷின் நண்பர் விஜய்பிரபு, சம்பந்தப்பட்ட வீடியோவை பிரகாஷூக்கே தெரியாமல் திருடி வாட்ஸ் அப்பில் பரப்பி இருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story