தோழி மகளிர் விடுதி - சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன தகவல்

x

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படுமா என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி , செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்திற்கு ஒரு விடுதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்