"தமிழ் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு.." - பரபரப்புக்கு பதில் சொன்ன மகளிர் ஆணைய தலைவி
தமிழ் சினிமாவில் கமிட்டி அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி செயலாளர் துரைகண்ணு மீது அத்துமீறல் புகார் எழுந்த நிலையில், கல்லூரி செயலாளர் நேரில் ஆஜராகவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குமாரி எச்சரித்தார். மேலும், தமிழ் திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக குழு அமைத்து கண்காணிக்கப்படும் எனவும் குமாரி தெரிவித்தார்.
Next Story