1000 ரூபாய் வந்ததை கொண்டாடிய பெண்கள் - கடுப்பாகி கண்டபடி திட்டிய பாஜக நிர்வாகி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கும் விதமாக கோலமிட்ட பெண்களை பாஜக நிர்வாகி மிரட்டியதால் பரபரப்பு நிலவியது. திமுக மகளிரணியை சேர்ந்த பெண்கள் சிலர், உடையப்பன் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில்,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கும் விதமாக கோலமிட்டனர்.
அப்போது, திடீரென அவ்வழியாக வந்த நபர் ஒருவர், தான் பாஜக நிர்வாகி எனவும், தங்கள் ஊரில் எப்படி நீங்கள் கோலம் வரையலாம் எனவும் அவர்களை விரட்டியடித்தார்..
Next Story