ஜவுளிக் கடை ஓனரை சரமாரியாக தாக்கிய கறிக்கடை பெண் உரிமையாளர் - மேட்டூரில் பரபரப்பு
மேட்டூர் அருகே ரூப் ஷீட் தொடர்பான பிரச்சனையில், ஜவுளி கடை உரிமையாளரும் அவரது மகனும் கும்பலால் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜவுளி கடை நடத்தும் பச்சமுத்து, கடையின் முன் ரூப் ஷீட் போட்டுள்ளார். அதனை அகற்றுமாறு அருகே கறிக்கடை நடத்தி வரும் லட்சுமி, பச்சமுத்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் காரில் வந்து, பச்சமுத்துவையும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கடையிலிருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story