நெல்லையில் தேர்தல் நிறுத்தமா? -ஐகோர்ட் கிளையில் பரபரப்பு மனு
#nainarnagendran #bjp #nellaielection
நெல்லையில் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகள் மற்றும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், இதனை முறையாக விசாரிக்காமல், தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சட்டவிரோதமாக வேட்பு மனு ஏற்கப்பட்டதால், தேர்தலை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Next Story