பஸ்ஸை வழிமறித்து நின்ற காட்டு யானை... மூச்சை இழுத்து பிடித்தபடி பயணிகள் - திக் திக் காட்சி

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்ற போது, நான்கு காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதை கண்டு ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். இதில் மூன்று காட்டு யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் தந்தத்துடன் கூடிய ஒரு ஆண் யானை சாலையின் நடுவே நின்றபடி பேருந்தை வழி மறித்தது. பின்னர் வனப்பகுதிக்கு அந்த யானை சென்ற பின் ஓட்டுநர் பேருந்தை இயக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்