புருஷனை கிட்ட நெருங்க விடாத மனைவி... பாதி எரிந்த நிலையில் காட்டுக்குள் உடல் - பகீர் பின்னணி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜோடுக்குளி வனப்பகுதியில் உள்ள கோயிலின் அருகே, பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, பெண்ணை கொலை செய்ததாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் முரளிகிருஷ்ணன் என்ற இளைஞர் சரணடைந்தார். பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பதும், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த கோகிலவாணி என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, வீட்டிற்கே தெரியாமல் காதல் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. சேலத்தில் தனியாக வீடு எடுத்து வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, முரளிகிருஷ்ணனிடம் பேசுவதை கோகிலவாணி தவிர்த்து வந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புளிசாத்து முனியப்பன் கோயில் வனப்பகுதியில் கோகிலவாணியை பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்ற முரளிகிருஷ்ணன், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.