திருமணமான 1 ஆண்டில் மனைவி தற்கொலை.. தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம் - தொடங்கும் ஆர்.டி.ஓ.விசாரணை

x

தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த

கணேஷ் என்பவருக்கும், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. அதோடு,சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கணேஷ் கூறியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தனி அறையில் படுத்திருந்த சுஜாதா காலையில் கதவை திறக்காததால்,வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து கதவைத் தட்டியுள்ளார்.

அப்போதும், கதவு திறக்காததை தொடர்ந்து,அக்கம் பக்கத்தினர் உதவியோடு, கதவு உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுஜாதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,ஆர்டிஓ விசாரணை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்