"திருமணத்துக்கு பின் பிறந்த வீடு செய்றத கண்டுகொள்ளாதது ஏன்?" - பெண்ணுக்காக பெண் நீதிபதி வேதனை

x

மணமான பின்னும் மகளுக்கு பெற்றோர் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமல் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த வங்கியின் உத்தரவை எதிர்த்து பிரியா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கு தொடர்பாக பதிலளித்த வங்கி, திருமணமான பெண், தந்தையின் வருமானத்தை சாராதவராக இருந்தால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என தெரிவித்தது...இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகு தந்தையுடன் வாழ்வது இயல்பாகிவிடும் நிலையில், மணமான பெண் தன் பெற்றோருடன் வசிக்க முடிவெடுத்துவிட்டால் அது அசாதாரணமானதாகக் கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெண், தனது மருத்துவம், கல்வி உள்ளிட்ட பிறவற்றிற்காக பெற்றோரை சார்ந்து இருந்து வந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும் போது, பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமான பணியாகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.

மணமான பெண்களுக்காக பெற்றோர்கள் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினால் மகளின் புகுந்த வீட்டின் கண்ணியக் குறைவானதாகக் கருதப்படுவது பிற்போக்குத்தனமானது என சுட்டிக் காட்டியுள்ளார். இதுபோன்ற கலாச்சார ரீதியிலான சிக்கலான விவகாரங்களில் அனுதாப அடிப்படையிலான அணுகுமுறை அவசியம் என குறிப்பிட்ட நீதிபதி,

பிரியாவின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரது தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை 6 வாரத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்