தமிழகத்தின் எந்தெந்த மாவட்ட பேருந்துகள் இங்கு இயக்கப்படும்? சென்னையின் புதிய கோயம்பேடு...

x

தமிழகத்தின் எந்தெந்த மாவட்ட பேருந்துகள் இங்கு இயக்கப்படும்? சென்னையின் புதிய கோயம்பேடு... பிரமிக்க வைக்கும் சிறப்பம்சங்கள்...

கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, நான்கு பெரிய உணவகங்கள், 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 12 இடங்களில் 24 மணி நேர குடிநீர் வசதி, 540 கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக இரண்டு கீழ் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், இரண்டாவது தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் வசதிகள் உள்ளன.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிராட்வே, திருவான்மியூர், தி.நகர், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல், அடையார், வேளச்சேரி உள்ளிட்ட

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

SETC, TNSTC, PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரத்து130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்