எங்கெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்? - மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு

x

தமிழ்நாடு முழுவதும் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கழிவுகளை சரியான முறையில் அகற்றுதலை ஆய்வு செய்வதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் இருப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தரமான வேவையை வழங்குவதற்கு போதுமான மருத்துவப் பணிகள் பணிபுரிதலை கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்