கரு கலைக்க அண்ணாச்சி பழ சாறு.. தங்குவதும், சாப்பிடுவதும் தனி கொட்டகையில் - தட்டி கேட்டால் கொடூரமாக விழும் அடி

x

கிருஷ்ணகிரியில் கலப்பு திருமணம் செய்த பெண்ணை, மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி என்பவரும், செவத்தான் கொட்டாய் கிராமத்தைச் சிவா என்பவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெங்களூருவில் உள்ள கீதாஞ்சலியின் அண்ணனின் வீட்டில் வசித்து வந்த போது, சிவாவின் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் செவத்தான் கொட்டாய் கிராமத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னர், கீதாஞ்சலிக்கு மட்டும் தனியாக கொட்டகை அமைத்து, அவருக்கென தனி சாப்பாடு கொடுத்துள்ளனர். இந்நிலையில், கீதாஞ்சலி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியறிந்து கருவைக் கலைக்கும் வேண்டுமெனக் கூறி சிவாவின் சகோதரிகள் அவருக்கு அன்னாசிப் பழச்சாறு கொடுத்துள்ளனர். கீதாஞ்சலி அதை குடிக்க மறுத்ததால், அவரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கீதாஞ்சலி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சிவாவின் குடும்பத்தினர் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிவா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்