மூன் லைட் சினிமா பார்த்து வீடு திரும்பியபோது பயங்கரம்.. ஸ்பாட்டிலேயே பறிபோன உயிர்

x

கடலூரை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் லட்சுமி நாராயணன். சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி சட்டப்படிப்பு படித்து வந்த இவர், சம்பவத்தன்று பெசன்ட் நகர் கடற்கரையில் மூன்லைட் சினிமா பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்து விட்டு நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் திரும்பிய லட்சுமி நாராயணன், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் நின்றிருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னால் அமர்ந்திருந்த அவருடைய நண்பர், ரோஹித், படுகாயமடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கோயம்பேடை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த லட்சுமி நாராயணன், அடிக்கடி பைக் சாகசங்கள் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு வந்ததும் தெரியவர, அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்