வாட்ஸ் ஆப் குரூப்பில் 5 பேர் கூட்டாக செய்த செயல் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபர்களிடம் போலீசார் சோதனை நடத்திய போது போதை பொருட்கள் சிக்கியது. இதனை தொடர்ந்து ஈனோக், தாமோதரன், சரத்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து போதை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
Next Story