வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்ட ஒரு வாட்ஸப் மெசேஜ்
திருப்பூரில் போலி செயலி மூலம் பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவிநாசியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர், ராஜேஷ். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட செயலி வாயிலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ராஜேஷும் அந்த செயலியை பயன்படுத்தி பங்குச்சந்தையில், சுமார் 24 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த செயலியானது போலி என ராஜேஷுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில், போலி செயலியை உருவாக்கி பணமோசடியில் ஈடுபட்ட அப்துல் காதர் ஜெய்லானி, மைதீன் பாட்ஷா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story