காயம்பட்ட மாணவியின் டிரஸ்ஸை கழற்ற சொல்லி நீச்சல் மாஸ்டர் செய்த காரியம்.. கொதிக்கும் தந்தை
நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு மாணவியின் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயிற்சிக்கு செல்லாமல் இருந்த மாணவியை, நீச்சல் பயிற்சியாளர் ஆழி வாசன் தனியாக அழைத்துச் சென்று, செல்போனில் புகைப்படம் எடுத்ததாக, பல்வேறு அதிகாரிகளுக்கு பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், நீச்சல் பயிற்சியாளர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை மிரட்டுவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவியை அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் திசை திருப்ப முயற்சிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். புகாருக்கு உள்ளான நீச்சல் பயிற்சியாளரை பாதுகாக்க முயற்சிப்பதாகவும், அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்