நாட்டையே உலுக்கிய கொடூரம்... ``தவறான தகவல்..'' பாஜக மூத்த தலைவருக்கு பறந்த நோட்டீஸ்

x

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக, இரண்டு மருத்துவர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதற்காக, மருத்துவர்கள் குணால் சர்க்கார், சுபர்னோ கோஸ்வாமி ஆகியோரும், பா.ஜ.க மூத்த தலைவர் லாக்கெட் சாட்டர்ஜிக்கும் கொல்கத்தா காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மூவரும் இன்று பிற்பகல் காவல்துறை முன்பு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்