டைம் மிஷின் மூலம் இளமையாக்குவதாக முதியவர்களுக்கு வலை
டைம் மிஷின் மூலம் இளமையாக்குவதாக முதியவர்களுக்கு வலை
மோசடியா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாப்பா என உத்தரபிரதேச போலீசாரை அதிரச் செய்திருக்கின்றனர் இந்த தம்பதி ..
அந்தளவுக்கு துணிச்சலாக.. இஸ்ரேல் தயாரித்த டைம் மெஷின் தங்களிடம் இருப்பதாகவும், அதன் மூலம் 60 வயது முதியவரை 25 வயது இளைஞராக நாங்கள் மாற்றிவிடுவோம் எனவும் கூறி ஒரு சிகிச்சை மையத்தையே ஆரம்பித்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்..
இந்த வலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆசையும், அறியாமையும் சேர விழுந்திருக்கிறார்கள்..
கடைசியில் அவர்கள் சுமார் 35 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்திருப்பதுதான் உத்தரபிரதேசத்தின் தற்போதைய தலைப்புச் செய்தி ...
இஸ்ரேல் தயாரித்த டைம் மெஷின் தங்களிடம் இருப்பதாக கைவரிசை
டைம் மிஷினுக்குள் சென்றால் வழங்கப்படும் ஆக்சிஜன் தெரபி முலம் முதியவர்களை அவர்களின் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்வோம் எனக்கூறிய பலே தம்பதி, இதற்கென ஸ்பெஷல் ஆஃபரும் அறிவித்து விபூதி அடித்திருக்கின்றனர்..
10 நாள்கள் கொண்ட சிகிச்சைக்கு 6 ஆயிரம் ரூபாயும், முன்று வருட சிகிச்சைக்கு 90 ஆயிரம் ரூபாய் என ஆஃபர் அறிவிக்க பணம் தானேப்பா... போனா போகட்டும்.. இளமை முக்கியம் என வரிசையில் வந்து நின்று இருக்கிறார்கள் சீனியர் சிட்டிசன்கள் பலரும்...
க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ரூ. 35 கோடி வரை மோசடி
இதில், 11 லட்சத்தை இழந்து, மன உளைச்சலில் மேலும் தன் ஆயுளை குறைத்துக் கொண்ட முதியவர் ஒருவர் போலீசில் புகாரளித்ததன் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது...
இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், தலைமறைவாக இருக்கும் ராஜிவ் துபே - ராஷ்மி துபே தம்பதியை வலை வீசி தேடி வருகின்றனர்...