"வீடியோவ டெலிட் பண்ணலேன்னா Treatment கொடுக்க மாட்டோம்" - பெண்ணை மிரட்டிய அரசு ஹாஸ்பிட்டல் ஊழியர்கள்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், வெளிநோயாளிகளுக்கான பதிவுசீட்டு வழங்கும் இடத்தில் ஊழியர் தூங்கியதை பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தூங்கிய ஊழியரிடம் கேள்வி எழுப்பியதால், டெலிட் செய்ய வேண்டும் என கூறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இல்லை என்றால், சிகிச்சை அளிக்க மாட்டோம் என மருத்துவமனை ஊழியர்கள் மிரட்டல் விடுத்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனை ஊழியர் தூங்கி வழியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Next Story