நாம் தமிழர், பாஜகவால் மாறும் களம்...? நம்பவே முடியாத முடிவை கொடுக்கும் சர்வே?

x

நாம் தமிழர், பாஜகவால் மாறும் களம்...? நம்பவே முடியாத முடிவை கொடுக்கும் சர்வே?

எதிர்வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ள தொகுதிகள் என்னென்ன? பிரதான கட்சிகளை தாண்டி, மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் ஏற்பட போகும் மாற்றம் என்ன? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...

மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனை ஒட்டி, கடந்த பிப்ரவரி மாதம் தந்தி டிவி தமிழக மக்களிடம் நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு, மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பானது.

அதில், தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, சிவகங்கை, தேனி, கோவை, பொள்ளாச்சி, சிதம்பரம், வேலூர் ஆகிய 6 தொகுதிகளில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என அறியப்பட்டுள்ளது.

மேலும், எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, இம்முறை முதல் முறையாக மூன்று தொகுதிகளில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெறும் என தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 10 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல, 14 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தை தாண்டி பா.ஜ.க. வாக்கு சதவீதம் பெறக்கூடும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், தென் சென்னை ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. இரட்டை இலக்க வாக்கு சதவீதம் பெற வாய்ப்பு இருப்பது மக்களின் கருத்துகள் மூலம் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்