வயநாட்டில் வேட்புமனுவை தாக்கல் செய்த கையேடு பிரியங்கா காந்தி வெளியிட்ட தகவல்
வயநாட்டில் வேட்புமனுவை தாக்கல் செய்த கையேடு பிரியங்கா காந்தி வெளியிட்ட தகவல்
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தொண்டர்கள் புடை சூழ, பெரும் எழுச்சிமிக்க நிகழ்ச்சிக்கு பின்பு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், வங்கி வைப்புத்தொகை, தங்க நகைகள் உட்பட 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், கணவர் ராபர்ட் வதேராவுக்கு 37 கோடியே 91 லட்சத்து 47 ஆயிரத்து 432 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், டெல்லி மெஹ்ரோளி பகுதியில் ராகுகாந்தியுடன் சேர்ந்த விவசாய நிலம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2 இடங்களில் 4 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் விவசாயம் இலலாத நிலம் தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்... சிம்லாவில் வீடு, மற்றும் நிலம் உள்ளதாகவும், 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாகவும், கணவர் ராபர்ட் வசேராவுக்கு 10 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புத்த கல்வியில் முதுகலை பட்டயம் படித்துள்ளதாக தனது கல்வி தகுதி குறித்து பிரியங்கா தெரிவித்துள்ளார்...