முண்டகை, சூரல்மலையில் குவியல் குவியலாக நகைகள், பணம்..? | Wayanad Landslide

x

நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீட்பு பணியாளர்கள் கண்டெடுக்கும் நகைகள், பணம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சிவில் ஸ்டேஷன் அல்லது பிற கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்குமாறு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் டிங்கு பிஸ்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்று, அந்த பட்டியலை கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் சேவையாற்ற வரும் தன்னார்வலர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருவாய்துறையினரின் கவுன்டர்களில் தன்னார்வலர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பேரிடர் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்