வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. நிதி திரட்டும் தமிழக இளைஞர்கள்..! அள்ளி கொடுக்கும் மக்கள்
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னார்வ அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி திரட்டி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில்" பிறர் நலன் நாடும்" தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வண்ணம் ஆடைகள், அரிசி, பிஸ்கட், காய்கறிகள் மற்றும் போர்வை, துண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திரட்டி வருகின்றனர். மேலும் திரட்டப்படும் பொருட்கள் மற்றும் நிதியை நாளை வயநாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story