சென்னையை நெருங்கும் குடிநீர் பஞ்சம் - ஆறுதலாய் வந்த தகவல்
சென்னை நகரின் குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் ரெட்டேரியை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளுக்கு கோடை காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெரம்பூர் அருகே உள்ள ரெட்டேரியை புனரமைக்க ரூபாய் 44.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், கரைகளில் நடைபயிற்சிக்கு ஏற்ற நடை பாதை, பூங்கா மற்றும் பறவைகள் தங்க ஏரிக்குள் மூன்று செயற்கை தீவுகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஏரியில் எஞ்சியிருந்த நீரையும் வெளியேற்றிவிட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story