மலை பகுதியில் வெளுத்தெடுத்த கனமழை... குடியிருப்புக்குள் ஆறு போல் ஓடும் தண்ணீர்
நீலகிரி, கோவை மலை பகுதி மற்றும் அடிவாரத்தில் உள்ள அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அன்னூரில் உள்ள ஒட்டார்பாளையம் குளம், ஊத்துப்பாளையம் குளம், கஞ்சப்பள்ளி குளம் உள்ளிட்டவை நிரம்பின. இந்த குளங்களில் இருந்து வழிந்த தண்ணீர் அன்னூர்- சத்தியமங்கலம் சாலையில் ஆறு போல் ஓடியதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் தண்ணீர் வடிந்து செல்ல வழி இல்லாமல், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன. இதனால் அன்னூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story