வாஷிங் மெஷினால் வந்த வினை... நிறுவனத்திற்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுத்த கோர்ட்

x

வாஷிங் மெஷினால் வந்த வினை... நிறுவனத்திற்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுத்த கோர்ட்

குளித்தலையில் ஆன்லைனில் வாங்கிய வாஷிங் மெஷினில் குறையை சரிசெய்யாத நிறுவனம் வாடிக்கையாளருக்கு 65 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. குளித்தலையை சேர்ந்த தாமஸ் பிளிப்கார்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷின், வீட்டுக்கு வந்தபோது சேதம் அடைந்திருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அனுகியபோது முறையாக பதில் சொல்லாமல், அலைக்கழித்ததால் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் சென்றிருக்கிறார். விசாரணையில் வாசிங் மெஷினை திரும்ப பெற்றுக்கொண்டு, 65 ஆயிரத்து 499 ரூபாயை வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்