உணவு பழக்கத்தால் துன்புறுத்தப்பட்டாரா மாணவி..? கோவை பள்ளி விவகாம்.. 7 மணி நேரம் விசாரணை

x

கோவை துடியலூர் அரசுப் பள்ளியில், மாணவியின் உணவு பழக்கம் குறித்து ஆசிரியர் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்றது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நேரடியாக விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர் அபிநயா, பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவியர் ஆகியோரிடமும், சக மாணவிகள், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினார். 7 மணி நேரத்திற்கும் மேலாக, விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணை நிறைவடையவில்லை மீண்டும் தொடரும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்